Official CM CELL Apply Link : Click Here

ஒருவருக்கு அரசின் குறிப்பிட்ட சேவை கிடைக்கவில்லை என்றால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியிடம் மனு அளித்து, பிரச்னையை சரி செய்துகொள்ளலாம். அவரும் உங்கள் புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவருக்கும் மேல் உள்ள அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். உதாரணமாக, தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்து நடவடிக்கை இல்லையெனில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம்.


அங்கும் முறையான நடவடிக்கை இல்லையெனில், நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கலாம். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கை தகுதியுடையதாக இருப்பின் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று உறுதியளிக்கிறது அரசு. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவே மிக எளிதாக உங்கள் புகாரை அனுப்ப முடியும். அதுகுறித்த நடைமுறைகளைத் தற்போது பார்க்கலாம்…
Official CM CELL Apply Link : Click Here 

cmcell.tn.gov.in என்ற இணைய முகவரிக்குள் நுழைந்ததும் `முதலமைச்சரின் தனிப்பிரிவு இணைய வழி கோரிக்கை மற்றும் பராமரிப்பு முறைமை’ என்ற முகப்பு பக்கம் திரையில் தோன்றும். தமிழ், ஆங்கிலம் இரண்டில் ஏதாவதொரு மொழியை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இயல்பில் அது ஆங்கிலத்தில்தான் இருக்கும். உங்களுக்குத் தமிழில் வேண்டும் என்றால் `தமிழ் வடிவம்' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

தொடர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் மேலே நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் `புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். ஏனெனில், நீங்கள் அந்த இணையதளத்துக்குள் நுழைவதற்கு உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.

Official CM CELL Apply Link : Click Here

புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்ததும் மேலே உள்ள படத்தில் இருப்பதைப் போல ஓர் அட்டவணை திரையில் தோன்றும் அதில் பெயர், பாலினம், தந்தை/ கணவர் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் முழுமையான முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும். தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் `சேமி’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதைச் செய்ததும் உங்களுக்கான லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு திரையில் தோன்றும். லாக்-இன் ஐடி என்பது நீங்கள் உள்ளீடு செய்த உங்களது மெயில் ஐடிதான். ஆகையால், பாஸ்வேர்டை மட்டும் குறித்து வைத்துக்கொள்ளவும்.

Official CM CELL Apply Link : Click Here

உள் நுழைக’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ததும் தோன்றும் திரையில் உங்களது லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டைக் கொடுத்து உள்ளே நுழையவும். உள்ளே நுழைந்ததும் `கோரிக்கை பதிவு’ என்ற பகுதி திரையில் தோன்றும். அதில் ஏற்கெனவே நீங்கள் அளித்திருந்த பயனாளர் விபரம் காட்டப்படும், அதற்குக் கீழே `கோரிக்கை விபரம்’ என்ற ஒரு பகுதி இருக்கும். இப்போது நீங்கள் அதை நிரப்ப வேண்டும். `கோரிக்கை வகை’ என்ற ஆப்ஷன் இருக்கும் அதை க்ளிக் செய்தால் ஒரு பட்டியல் காட்டப்படும் அதில் பட்டா உரிமம், விருதுகள், அடிப்படை வசதிகள், முதலமைச்சர் நிவாரண நிதி, தீ விபத்துக்குப் பின்பான புகார், கோவிட்-19, வேலைவாய்ப்பு, நிதி உதவி, வெள்ள நிவாரண உதவி, பொதுவானவை எனப் பல்வேறு பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Official CM CELL Apply Link : Click Here 


அந்தப் பட்டியலில் நீங்கள் அளிக்கவிருக்கும் புகார் எது தொடர்பானது என்பதைப் பொறுத்து, தகுந்த பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, `மேலே குறிப்பிட்டுள்ள தொடர்பு முகவரியும் பாதிக்கப்பட்ட முகவரியும் ஒன்றா?’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கும் ஆம்/இல்லை என இரு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எதுவோ அதைத் தேர்வு செய்ய வேண்டும். `இல்லை’ என்பதை செலக்ட் செய்தால் பாதிக்கப்பட்டோரின் முகவரியைப் பதிவிடுவதற்கு ஒரு பகுதி திறக்கும். அதில் அவரின் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும். அதாவது, நீங்கள் வேறொருவருக்காகக்கூடப் புகாரைப் பதிவு செய்ய முடியும்.

Official CM CELL Apply Link : Click Here 


அடுத்ததுதான் முக்கியமானது. `கோரிக்கை’ என்ற பகுதியில் உங்களது புகாரை டைப் செய்ய வேண்டும். உங்கள் புகார் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருப்பதும் %,&,$,@ போன்ற சிறப்புக் குறியீடுகள் இல்லாமல் இருப்பதுவும் முக்கியம். புகாரை `Unicode Font’-ல் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைப் செய்த பிறகு, `சமர்ப்பி’ என்ற ஆப்ஷன் இருக்கும் அதை க்ளிக் செய்தால் உங்கள் புகார் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். அதைத் தொடர்ந்து உங்களுக்கான கோரிக்கை எண் கொடுக்கப்படும். அதைக் குறித்து வைத்துக்கொள்ளவும்.

உங்களது கோரிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்க்க அந்த எண் அவசியம். உங்கள் கோரிக்கை நிலையைப் பார்ப்பதற்கு அதே இணையதள முகவரிக்குச் சென்று லாக் இன் செய்து `கோரிக்கை நிலவரம்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது கோரிக்கை எண் மற்றும் கேப்ச்சாவை உள்ளீடு செய்தால் போதும், உங்கள் புகார் எந்த நிலையில் இருக்கிறது. அதன்மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்ற விவரங்களை


உங்களால் இணையதளத்தில் புகார் பதிவு செய்ய இயலாது என்றாலும் கவலையில்லை. 044-25671764 என்ற தொலைபேசி எண் மூலமும் அல்லது cmcell@tn.gov.in என்ற இ-மெயில் மூலமாகவோ, 044-25676929 என்ற எண்ணுக்கு ஃபேக்ஸ் மூலமாகவோ உங்கள் புகாரை அனுப்பலாம். முதலமைச்சர் தனிப்பிரிவில் நீங்கள் அளித்த புகார், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பித் தீர்வு காணப்படும்.

Official CM CELL Apply Link : Click Here

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

தேர்தலுக்கு முன்பு `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு தொகுதிக்கும் பிரசாரத்துக்காகச் செல்லும்போதும் இந்தத் திட்டத்தின் கீழ் அந்தத் தொகுதியில் உள்ள பிரச்னைகளை மனுக்களாகப் பெற்றார். `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்திருந்தார். அதன்படி மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறையை உருவாக்கினார்.

இந்தத் துறைக்குச் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இந்தத் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. cmcell.tn.gov.in என்ற இணையதளத்தில் `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறைக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் அந்த அதிகாரிகளுடைய தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் மாவட்டத்தில் `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள் பட்டியலை அறிந்துகொள்ள விரும்பினால் அதை க்ளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

Official CM CELL Apply Link : Click Here

Post a Comment

Previous Post Next Post