தமிழகம் முழுவதும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதனால் 10,000 நபர்கள் வேலைக்கு எடுக்க வேண்டி உள்ளது வரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி.

சென்னை  தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழகம் முழுவதும் 19200 பேருந்துகளில் இன்று 14715 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் நாளை முதல் 2300 ஏசி பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் இந்த பேருந்துகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்படும் என்று கூறிய அவர் போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக 10 ஆயிரம் நபர்கள் வேலைக்கு எடுக்க வேண்டி உள்ளது என்றும் முதல்வரிடம் ஆலோசித்து பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் திருக்குறள் பலகை வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது இந்த பணிகள் அனைத்தும் அடுத்து வரும் 10 நாட்களுக்குள் நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 8 போட வேண்டாம் என மத்திய அரசின் உத்தரவு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவெடுக்கப்படும்.. போக்குவரத்து துறையில் இடைத்தரகர்கள் இல்லாமல் ஊழல் இல்லாத பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் அமைச்சர் உறுதிப்பட கூறினார்.

தமிழகம் முழுவதும் பொது முடக்கம் காரணமாக தற்போது 7297 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1550 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் மகளிர், மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகளுக்கு வருகின்ற 12ம் தேதி முதல் அனைவருக்கும் இலவச பயண சீட்டு பேருந்துகளில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

Post a Comment

أحدث أقدم